Categories
உலக செய்திகள்

“சபாஷ்! அதிரடி சட்டம்”…. பாலூட்டும் தாய்மார்களை புகைப்படம் எடுத்தால் அவ்வளவு தான்….!!

இங்கிலாந்து அரசு வெளிப்புறங்களில் தாய்மார்கள் பாலூட்டும் போது புகைப்படம் எடுத்தால் சட்டபடி குற்றம் என்று தெரிவித்திருக்கிறது.

இங்கிலாந்தில் நிதித்துறை செயலாளராக உள்ள டோமினிக் ராப், இதுகுறித்து தெரிவித்திருப்பதாவது, வெளிப்புறங்களில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் போது அவர்கள் அனுமதியின்றி புகைப்படம் எடுத்தால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அந்த புகைப்படத்தின் மூலமாக அவர்களை அங்கீகரிப்பது ஒரு புறம் இருக்கிறது. எனினும், இதனால் அவர்கள், வன்முறைக்கு ஆளாக்கப்படுவதை தவிர்ப்பதற்காக இச்சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதாவது, அந்நாட்டில் உள்ள மான்செஸ்டர் நகரில், கடந்த ஏப்ரல் மாதம் ஜூலியா என்ற பெண் பொதுவெளியில் குழந்தைக்கு பாலூட்டி கொண்டிருந்துள்ளார்.

அப்போது, அவரின் அனுமதியின்றி சிலர் அதனை புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். எனவே அவர் வெளிப்புறங்களில் பாலூட்டுபவர்களின் அனுமதியில்லாமல் புகைப்படம் எடுப்பது குற்றம் என்று பிரச்சாரம் செய்ய தொடங்கினார். அவருடன் பலர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதுபற்றி ஜூலியா தெரிவித்திருப்பதாவது, “மான்செஸ்டர் நகரில் நான் பாலுட்டிக்கொண்டிருந்ததை பார்த்த ஒரு நபர் திடீரென்று, அவரது டிஜிட்டல் கேமராவை எடுத்து படம் பிடிக்க தொடங்கினார்.

அதில் எனக்கு விருப்பமில்லை. எனவே காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தேன். அவர்கள், இது ஒன்றும் குற்றம் கிடையாது என்று கூறிவிட்டார்கள். இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, இதுதொடர்பாக பிரச்சாரம் செய்ய தொடங்கினேன் என்று கூறியிருக்கிறார். இந்நிலையில், இச்சட்டம் அங்கு விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.

Categories

Tech |