Categories
அரசியல் மாநில செய்திகள்

ஹீரோ மாறி பேசாதீங்க…. நீங்க ஸிரோ தான்… அண்ணாமலைக்கு பதிலடி …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக, ஒரு சில அரசியல் தலைவர் என்ற போர்வையில் ஜீரோவாக இருக்கு கூடிய தலைவர்கள் எல்லாம் தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆவினை பொருத்தவரையில் 430 ml  இருக்கக் கூடியதாக சொல்கிறார்கள். ஆக அதனுடைய அளவுகள் என்னவென்றால்,

500ml  கிடையாது, ஏறக்குறைய அதனுடைய எடை 517 கிராம் இருக்க வேண்டும். 500 கிராம் வந்து பால் அதோடு சேர்த்து 10ml கொஞ்சம் வரணும் 510. அது இல்லாமல் கூடுதலாக இரண்டில் இருந்து,  மூன்று பால்கவர் 55 மைக்ரான் என்று சொல்வார்கள். அது வந்து  3 கிராம் கூடும். ஆக 517 கிராம் வரைக்கும் இருக்கும். இது மூன்று விதமான ஆய்வுக்குப் பிறகுதான் பால் வெளியே வருகிறது.

முதலில் வந்து உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு செய்த பிறகு தான் வெளியே வருகிறது. அடுத்து வந்து எங்களிடம் இருக்கக்கூடிய குவாலிட்டி கண்ட்ரோல் ஒரு லிட்டர் பாலில் எவ்வளவு புரத சத்து இருக்கிறது, எத்தனை சதவீதம் புரோட்டின் இருக்கும், எத்தனை கலோரி இருக்க வேண்டும். 488 கலோரி இருக்க வேண்டும், அதே மாதிரி பார்த்தால் சர்க்கரை எவ்வளவு இருக்க வேண்டும்..

fat  எவ்வளவு இருக்க வேண்டும் எஸ்.என்.எஸ் எவ்வளவு இருக்க வேண்டும் என்று சொல்லி படிப்படியாக ஆய்வு செய்து, அதில் ஒரு சதவீதம் குறைந்தாலும் சரி, ஒரு சதவீதம் கூடினாலும் சரி அதை ஆய்வு செய்து பிறகுதான் குவாலிட்டி கண்ட்ரோல் என்று சொல்வார்கள். அதற்கு தனி அதிகாரிகள் உள்ளார்கள், அவர்களுடைய ஆய்வுக்கு பிறகு தான் அது வெளியே வர வேண்டும்.

அடுத்தபடியாக மூன்றாவதாக அங்கு இருக்கக்கூடிய எங்களுடைய பொறியாளர்கள் முழுக்க முழுக்க பாக்கெட்டுகளை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சரிபார்த்துக் கொண்டிருப்பார்கள். மிஷின் மூலம் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சரிபாரத்து அதில் 550 கிராம் போகிறதா,  495 கிராம் போகிறதா என்று ஆய்வு செய்து கொண்டு வருவார்கள்.

கம்மியாக சென்றாலும் பதில் சொல்ல வேண்டும், அதிகமாக போனாலும் நஷ்டம் ஏற்படும், ஆக இரண்டு விதமான சூழ்நிலையும் சரி பார்ப்பதற்காக தனியாக பொறியாளர்கள் வைத்து ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட மூன்று விதமான ஆய்வுக்கு பிறகு தான் அந்த பால் வெளியே வருகிறது என தெரிவித்தார்.

Categories

Tech |