Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைசரிடமும் சொல்லி இருக்காரு… எல்லாம் சேர்ந்து மறைச்சுட்டாங்க… திமுக திடீர் போராட்ட அறிவிப்பு …!!

மருத்துவ கல்லூரியில் கல்வியில் 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் திமுக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு இதுவரை ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. உடனடியாக ஒப்புதல் அளிக்க வலியுறுத்திய ஆளுநருக்கு கடிதம் எழுதினேன். தனக்கு மூன்று – நான்கு வாரங்கள் அவகாசம் தேவை என்று ஆளுநர் சொல்லியிருப்பது மசோதாவை நீர்த்துப் போக வைப்பது. இதையே தமிழக அமைச்சர்கள் குழுவிடமும்ஆளுநர் தெரிவித்திருக்கிறார். ஆனால் திட்டமிட்டு மறைந்து விட்டார்கள்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீட்டை செயல்படுத்தினால் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் தருவதாக அமைச்சர்களிடம் ஆளுநர் சொன்னதாகவும் செய்தி வலம் வருகிறது. சமூகநீதியை சீர்குலைக்கும் கருத்து அது.  நடந்தது என்ன என்பதை அமைச்சர்கள் விளக்குவார்களா ?

உள் ஒதுக்கீட்டை அதிமுகவுடன் இணைந்து போராட தயார் என்று அறிவித்தேன். ஆனால் ஆளுநரை எதிர்த்து போராடும் துணிச்சல் முதலமைச்சருக்கு இல்லை. மௌனம் சாதிக்கிறார்.

மாணவர் நலனையும், சட்டமன்றத்தின் மாண்பினையும் பாதுகாக்கும் போராட்டத்தில் திமுக இறங்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கோரியும் –  அழுத்தம் கொடுக்க தவறி மாணவர்களுக்கு துரோகம் செய்யும் அதிமுக அரசை கண்டித்தும் 24 – 10 – 2020 (சனிக்கிழமை) அன்று காலை 10 மணி அளவில் திமுக சார்பில் ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முக ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |