செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையிடம், நீங்கள் ஒரு ஐ.பி.எஸ். ஆபிசர், பாரத ஜனதா கட்சியின் மாநில தலைவராக இருக்கிறீர்கள் .அப்படிப்பட்ட நீங்கள் ”செருப்பு அப்படிங்கற” தரம் தாழ்ந்த வார்த்தையை பயன்படுத்தலாமா ? நாங்க எல்லா கட்சிகாரங்களையும் தான் சொல்லுறோம்.
ஏன்னா இப்போ நிறைய பேரு மாறிட்டு வராங்க படிச்சவங்க நீங்க எல்லாம் அரசியலுக்கு வரும்போது. அடுத்த தலைமுறை அரசியலுக்கு வரும் போது, இப்படியான விமர்சனம் அவர்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாதா? என கேள்வி எழுப்பினர். அதற்க்கு பதிலளித்த அவர்,
நீங்க கேட்கிறது எல்லாமே பொதுவான கேள்விதான். யாரும் தனிப்பட்ட முறைல கேட்கல, நான் கேள்வியை ஏத்துக்கிறேன். எல்லாரும் பொதுவான கேள்வி தான் கேட்கிறீங்க. இந்த விஷயத்தைப் பொறுத்தவரை தி.மு.க. அதனுடைய பழைய அரசியல் பாணியிலிருந்து வெளியே வரணும். மிரட்டிறலாம், உருட்டிரலாம். இந்த பையன் கிராமத்தில் இருந்து வந்து இருக்கான், சாதாரண பையன், என்கிட்ட பெரிய பவர் இருக்கு இந்த மாதிரி மிரட்டி பார்த்தாங்க அப்படினா, நான் என்னுடைய பதிலடி கொடுப்பேன்.
நாளைக்கு காலைல துண்டு போட்டுட்டு என்னுடைய விவசாய தோட்டத்தில் போய் விவசாயம் செய்வேன், புழைச்சுக்குவேன். உங்களால முடியுமா? பி.டி. ஆர். அவர்களால் முடியுமா? முதலமைச்சரால முடியுமா ? நான் எதோ விதாண்டா வாதத்துக்காக பேசல. எனக்கு அந்த துணிவு இருக்கு, தைரியம் இருக்கு. நான் காலையில காட்டுல போய் படுத்து என்னால தூங்க முடியும். நீங்க ஏசி ஆஃப் பண்ணிட்டு உங்க காரிலையே கிராமத்துக்கு வாங்க பார்க்கலாம். உங்களால முடியாது என தெரிவித்தார்.