திமுக கட்சியை சேர்ந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டதோடு கூடுதலாக சிறப்பு திட்ட அமலாக்கத்துறை, வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன் துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜகவைச் சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி தற்போது போட்டுள்ள டுவிட்டர் பதிவு கவனம் பெற்றுள்ளது.
அதில் உதயநிதி அவர்களே நீங்கள் அமைச்சராகி விட்டதால் நீங்கள் தான் அரசாங்கம் என்று நினைத்து என்ன வேணாலும் செய்யலாம் என்ற மனநிலைக்கு வந்து விடாதீர்கள். எங்களிடம் அசைக்க முடியாத ஒரு சக்தி இருக்கிறது. அதற்கு பெயர் தான் அண்ணாமலை என்று பதிவிட்டுள்ளார். மேலும் இதற்கு முன்பாக பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.