டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டதற்கு திமுக வரவேற்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து நேற்றும், இன்றும் மது விற்பனை தமிழகத்தில் ஜோராக நடைபெற்றன. அதேநேரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டல்கள் மது விற்பனையில் மீறப்பட்டதுள்ளதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் டாஸ்மாக் மதுக்கடைகளை ஊரடங்கு உத்தரவு முடியும் வரை திறக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தயாராகி கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை வரவேற்று அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். திமுக சார்பில், ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடையை மூடுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டதை வரவேற்கிறோம். மக்களின் உயிர் நலன் மீது அக்கறை கொண்ட நீதிமன்றம் அளித்த உத்தரவை திமுக வரவேற்கிறது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் முயற்சிகளை அதிமுக அரசு கைவிட வேண்டும். மக்களின் உயிரை பணையம் வைக்காமல் ஊரடங்கு நீர்த்துப்போகச் செய்யாமல் உத்தரவை ஏற்க வேண்டும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நிர்வாகத் திறமையற்ற #குடிக்கெடுக்கும்_அதிமுக அரசுக்குத் தக்க பாடமாக, ஊரடங்கு காலம் முடியும் வரை மதுக்கடைகளை மூடவேண்டும் என்னும் உயர்நீதிமன்றத்தின் ‘மக்களைக் காக்கும்’ உத்தரவை திமுக வரவேற்கிறது.
மேல்முறையீட்டு முயற்சிகளைத் தவிர்த்து உத்தரவை ஏற்று அதிமுக அரசு நடக்க வேண்டும். pic.twitter.com/7HAAuRjNQX
— M.K.Stalin (@mkstalin) May 8, 2020