ஏப்ரல் 5ம் தேதி மெழுகுவர்த்தி ஏற்றும் போது ஆல்கஹால் சானிடைசரை பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய ராணுவம் அறிவுரை வழங்கியுள்ளது. நேற்று காலை காணொலி மூலம் மக்களை சந்தித்த பிரதமர் மோடி, ” கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதை வெளிப்படுத்த வரும் ஞாயிற்றுக்கிழமை(5-ம் தேதி) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அனைத்து தீபம், டார்ச், செல்போன் விளக்குகளை வீட்டிற்குள் ஒளிரவிட வேண்டும்” என உரைத்தார்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் 21 நாட்கள் ஊரடங்கு நாடுமுழுவதும் கடந்த 25-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இன்று ஊரடங்கு உத்தரவில் 11-வது நாளை மக்கள் எட்டியுள்ளார்கள். கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மக்களில் பெரும்பான்மையினர் ஊரடங்கு உத்தரவுக்கு கட்டுப்பட்டு வீட்டில் இருக்கின்றனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடி சொன்னது போன்று நாளை தீபம் ஏற்றும் போது மிகவும் கவனமாக இருக்க இந்திய ராணுவம் அறிவுறுத்தி உள்ளது. தீபம் ஏற்றும் முன்பு கைகளை சானிடைசர்கள் கொண்டு கழுவ வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக தீபம் ஏற்றும் முன்பு ஆல்கஹாலிக் சானிடைசர்களை பயன்படுத்தாதீர்கள் என்றும் சோப்புகளை கொண்டு கைகளை கழுவ வேண்டும் எனவும் நாட்டு மக்களுக்கு இந்திய ராணுவம் அறிவுரை வழங்கியுள்ளது.