Categories
பல்சுவை

75 ஆவது சுதந்திர தினம்.. பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்தக்கூடாது.. மாநில அரசுகளுக்கு முக்கிய உத்தரவு..!!

மத்திய உள்துறை அமைச்சகம், பிளாஸ்டிக் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தேசியக் கொடிகளை பயன்படுத்தக் கூடாது, என்று மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இம்மாதம் 15 ஆம் தேதி அன்று, நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதில், நாட்டு மக்கள் தேசியக்கொடி மேல் பற்று மற்றும் மரியாதை வைத்திருக்கிறார்கள்.

எனவே தான், சுதந்திரதினம் மற்றும் குடியரசு தினத்தன்று தேசியக்கொடியை தங்கள் சட்டையில் குத்தி செல்கிறார்கள். தேசியக்கொடிக்கான மரியாதையை வழங்க வேண்டும். எனினும் பிளாஸ்டிக் கொடியால் அது சாத்தியமாகாது. பிளாஸ்டிக் கழிவுகள், எளிதாக மண்ணில் மக்காது. தாமதம் ஏற்படும். மேலும் நீர் வளம் மற்றும் மண் வளத்திற்கும் பாதிப்பு ஏற்படும்.

எனவே பிளாஸ்டிக்கை, பயன்படுத்தி தேசியக்கொடிகள் தயாரிப்பதை நிறுத்தவேண்டும். காகிதத்தை பயன்படுத்தி தேசியக்கொடியை உருவாக்க வேண்டும். சுதந்திர தினம்  மட்டுமல்லாமல், அரசு தொடர்பான விழாக்கள் மற்றும் நிகழ்வுகள் என்று அனைத்திலும் பிளாஸ்டிக் தேசிய கொடிகளை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |