Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ஷாக்…..”கட்சி பெயர், கொடி பயன்படுத்தாதீங்க” கிருஷ்ணசாமி அதிரடி…!!

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவில்லை என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

சென்னையில் புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் டாக்டர்.கிருஷ்ணசாமி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது, “கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பள்ளர், குடும்பர், காலாடி ,பன்னாடி, மூப்பர், தேவேந்திரகுலத்தான் உள்ளிட்ட ஆறு பெயர்களில் அழைக்கக் கூடிய ஒரு சமுதாய மக்களை தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தோம். (நெல்லை மாவட்ட வாதிரியார் சமூக மக்களும் இதில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர்).

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதும், சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடந்த போதும், மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் மதுரைப் பொதுக்கூட்டத்திலும், மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தூத்துக்குடி பொதுக்கூட்டத்திலும், கோரிக்கையை நிறைவேற்றித்தருவதாக வாக்குறுதி கொடுத்தார்கள். எஸ்சி பட்டியலில் இருந்து வெளியேற்றி தனி இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்திருந்தோம். இதுவரை அந்த கோரிக்கைகளுக்கு அதிமுக அரசு செவிமடுக்கவில்லை. அதனால், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு கொடுக்கவில்லை. கட்சியின் பெயரையோ, கொடியையோ, தலைவரின் படத்தையோ தேர்தல் பரப்புரையில் அதிமுக வேட்பாளர் பயன்படுத்தக் கூடாது.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |