Categories
மாநில செய்திகள்

இனி 18 வயது வரை காத்திருக்க வேண்டாம்… 17 வயதனாலே வாக்காளர்களாக சேர்க்கலாம்?

17 வயது நிறைவடைந்தவர்களை வாக்காளர்களாக சேர்க்கும் திட்டத்தை பள்ளியளவில் செயல்படுத்த தேர்தல் ஆணையம் பரிசலித்து வருவதாக தகவல் வருகிறது.

இதுவரை 18 வயது நிறைவடைந்தவர் படிவம் 6 மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்து வாக்காள பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்ட செயல்குழுக்களில் நடந்த விவாதங்களின் அடிப்படையில் புதிய திட்டங்களை செயல்படுத்த தேர்தல் ஆணையம் ஆலோசனைகளை நடத்தி வருகிறது.

அதன்படி 17 வயது பூர்த்தியாகி 18 வயதை தொடும்போதே எளிதாக வாக்காளபட்டியலில் தங்கள் பெயரை பதிவு செய்யும் வகையில் படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மூலம் ஆன்லயனில் மூலம் பெயர்களை பதிவு செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். தேர்தலில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் புதிய வாக்காளர்களை அடையாளம் காண்பதற்கும் இந்த முறை கொண்டு வரப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |