அதிமுகவின் முன்னாள் நிர்வாகி கே.சி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, பிஜேபி கூட்டணி இல்லாத அண்ணா திமுக தான் தேவை. நிச்சயமாக எங்களை பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சியோடு, திமுகவோடு நேரடியாகவோ, மறைமுறை முகமாகவோ எந்த கூட்டணியோ… எந்த ஒப்பந்தமும் இருக்காது. இன்னும் சொல்லப்போனால்….
நாற்பதும், எப்படி 2014இல் மோடியா, லேடியா என்கிற அளவிற்கு தேர்வு களம் அமைந்ததோ, 2016 இல் பார்த்தீர்கள் என்றால் 41% வாக்குகளை அண்ணா திமுக தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. அந்த வழியில் இன்றைக்கு தொண்டர்கள் வலிமையாக இருக்கிறார்கள்.
திமுக பார்த்தீர்கள் என்றால் கரப்ஷன், கலெக்ஷன், கமிஷன் என்று அவர் இன்றைக்கு அவருடைய ஆட்சிக்கு…. எடப்பாடி பழனிச்சாமி காலத்தில் 10 சதவீதம் வாங்கினது, இப்போ 15 சதவீதம். நிச்சயமாக வந்து திமுக காரர்கள் கூட ஊழல் அற்ற ஆட்சி என்று யாரும் சொல்வது கிடையாது.
அப்போ அண்ணா திமுக வலிமையாக இருக்கிறது, இவர்கள் இரண்டு பேரும் போடும் பதவி சண்டையில், மக்கள் மத்தியில் இந்த கட்சி ஒற்றுமையாக இல்லை என்கின்ற பிம்பம் இருக்கிறது…அப்போ இவர்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு தொண்டர்கள் முடிவு செய்யட்டும், பிஜேபி இல்லாத ஒரு கூட்டணியாக தான் அண்ணா திமுக இருக்கும் என தெரிவித்தார்.