Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாடே வேண்டாம்…! வேறு மாநிலம் போய்டலாம்… புலம்ப வைத்த திராவிட மாடல்… செல்லூர் ராஜீ பரபரப்பு பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, வீட்டு வரி உயர்வு 100 % , மின்சார கட்டணமும் 100 சதவீதம் உயர்வு என்னும் போது , மக்கள் இருக்கின்ற பொருளாதார நெருக்கடியில் மிகப்பெரிய துன்பம். நம்முடைய வணிக பெருமக்களே பல எதிர்ப்புகளை தெரிவித்து இருக்கிறார்கள், சிறுகுறு வியாபாரிகள், வணிகர்கள் எல்லாம் நாங்கள் பேசாமல் இந்த தொழிலை விட்டுட்டு வேற தொழில் போக வேண்டும் அல்லது வேறு மாநிலத்துக்கு தான் போகணும் என்கிறார்கள்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சிறுகுறு தொழில் முதன்மையான தொழில். அவர்களுக்கு மிகப்பெரிய ஒரு பாதிப்பை இந்த மின்சார கட்டணம் உயர்வு உருவாக்கி இருக்கிறது.ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆலோசனை கேட்டார்கள். மக்களின்  ஆலோசனையை என்ன ஏற்றுக் கொண்டார்கள் ? இந்த மின்சார வாரியம் என்ன ஏற்றுக் கொண்டார்கள் ? எதற்காக அந்த கூட்டத்தை நடத்துகிறார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

இதற்கு கருத்து கேட்காமல் அவர்களே கட்டணத்தை உயர்த்த சொல்லலாம்.  இந்த அரசாங்கம் ஏற்றி இருக்கிறது என்றால், உண்மையிலேயே மிகபெரிய சுமையை மக்கள் மீது ஏற்றி வைத்திருக்கிறார்கள். வறுமை கோட்டிற்கு கீழே இருக்கிற மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பாக இருக்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

மின்சார கட்டணம் உயர்ந்து விட்டது. சரி.. மின்சாரத்தையாவது  ஒழுங்காக கொடுக்கிறார்களா என்று கேட்டால், அதுவும் கிடையாது. மின்சாரம் எப்ப வரும் ? எப்ப போகும் ? என்ற நிலை தான் திமுக ஆட்சியில்… எனவே மக்கள் ஏகாபித்த கோவத்தில் இந்த அரசாங்கத்தின் மீது இருக்கிறார்கள். இதில் திராவிட மாடல் என்று சொல்கிறார், என்ன மாடல் ? மக்கள் மீது வரி சுமத்துவது தான் திராவிட மாடலா? என கேள்வி எழுப்பினார்.

Categories

Tech |