ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் எந்த நிறுவனத்திலும் தலைமை செயல் அதிகாரியாக இருப்பதற்கு எனக்கு விருப்பம் கிடையாது என்று கூறியிருக்கிறார்.
உலக பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் எலான் மஸ்க், டெஸ்லா என்னும் உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார். இந்நிலையில், அந்நிறுவனத்தின் பங்குதாரராக இருக்கும் ரிச்சர்ட் ஜே. டோர்னெட்டா அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
கடந்த 2018 ஆம் வருடத்தில், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த எலான் மஸ்க், அதிக அளவில் இழப்பீட்டுத் தொகையை கொடுத்ததாக குற்றம் சாட்டியிருக்கிறார். இந்த வழக்கு தொடர்பில் நேற்று நீதிமன்றத்தில் எலான் மஸ்க் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது, எந்த நிறுவனத்திலும் தலைமை செயல் அதிகாரியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பியதில்லை என்று கூறினார்.
எனவே அவர் இனிமேல் ட்விட்டர் தலைமை செயல் அதிகாரியாக எப்போதும் இருக்க மாட்டார் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறார். புதிய தலைமை செயல் அதிகாரியை தேர்ந்தெடுக்கப்போவதாகவும் கூறி இருக்கிறார்.