கமல் மக்களை கெடுக்கிறார் எனவே பிக்பாஸ் பார்க்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி விமர்சித்து வருகின்றனர். மேலும் பிரபல நடிகர்களான ரஜினி மற்றும் கமல் ஆகியோரும் அரசியலில் இறங்கியுள்ளனர். இதையடுத்து நடிகர் பார்த்திபனும் அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். இதனால் வரும் சட்டமன்ற தேர்தல் எதிர்பார்ப்போடும் ,சுவாரசியமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் எம்ஜிஆர் குறித்து கமல் பேசிவருவது அதிமுகவினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. எனவே “பிக்பாஸ் பார்த்தால் நன்றாக இருக்கும் குடும்பம் உருப்படாமல் போய்விடும்” அப்படி ஒரு நிகழ்ச்சியை நான்கு ஆண்டுகளாக தொகுத்து வழங்கிய அனைத்துக் குடும்பங்களையும் கமல் கெடுத்துள்ளார் என்று பழனிசாமி சாடியுள்ளார். மேலும் கமல் படங்களில் எம்ஜிஆர் படத்தை போல நல்ல கருத்துக்கள் இல்லை என்றும் சினிமா மூலமும் மக்களை கெடுக்கிறார் என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார்.