Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

டிவி பார்க்காதே…… தந்தை கண்டிப்பால் மனஉளைச்சல்…… +1 மாணவி தூக்கிட்டு தற்கொலை….!!

திருநெல்வேலி அருகே டிவி பார்க்கக்கூடாது என்று தந்தை கண்டித்ததன்  காரணமாக மனமுடைந்த பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியையடுத்த கீழ அரியகுளம் கிராமத்தின் தெற்கு தெருவில் வசித்து வருபவர் முருகன். இவருக்கு நான்கு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் மூத்த மகளான ராமலட்சுமி, மூலைக்கரைப்பட்டி பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவருக்கு டிவி பார்க்கும் பழக்கம் அதிகம் இருந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தந்தை மூத்த பிள்ளையான நீ அடிக்கடி  டிவி பார்த்துக் கொண்டிருந்தால்,.  உனக்கு பின்னால் வருபவர்கள் உன்னை பார்த்து தான் கற்றுக் கொள்வார்கள் அவர்கள் எப்படி படிப்பார்கள் என்று நாள்தோறும் வசைபாடி திட்டி வந்துள்ளார்.

இதனால் மன உளைச்சல் அடைந்த ராமலட்சுமி வீட்டில் விவசாயத்திற்காக வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். பின் இதை அறிந்த அவரது தந்தை அவரை உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் எந்தவித பலனும் என்ற மந்திரத்தை தினமும் உயிரிழந்தார். இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதோடு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |