கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார்.
கொரோனா வைரஸ் ஆய்வு குறித்த கூட்டம் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமயில் நடைபெற்றது. இது சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் சென்னை தேனாம்பேட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், கொரோனா குறித்து பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம். சீனாவில் கொரோனா பரவியத்திலிருந்தே தனி வார்டுகள் அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம். கொரோனா குறித்து சமூக ஊடகங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்.
முக கவசம் போடவேண்டிய நிலை தமிழகத்தில் இல்லை. 60 பேருக்கு ரத்த மாதிரிகளை சோதித்ததில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபரின் உடல் நிலை சீராக உள்ளது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் தொடர்ந்து கண்காணிக்கிறோம். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை சோதித்து உள்ளோம்.
கொரோனா குறித்து மத்திய அரசு தினமும் அறிவுறுத்திவருகிறது. சீனா , இத்தாலி , தென் கொரியா ஜப்பானில் இருந்து வரும் பயணிகளை தொடர்ந்து கண்காணிக்கிறோம். பாதிப்பு உள்ளவர்களிடம் இருந்து மற்றொரு நபருக்கு பரவுவதை 100% தடுத்து வருகிறோம். உலக சுகாதார விதிகளின்படி கண்காணிப்பு பணிகள் நடக்கிறது. மருத்துவ விதிகள் காரணமாக நோயாளியின் குறித்த தகவலை வெளியிடவில்லை.இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் வந்தபிறகு தான் கொரோனா வருகின்றது. காய்ச்சல், மூச்சுத்திணறல் இருந்தால் உடனே அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.