Categories
லைப் ஸ்டைல்

40 வயது ஆகிவிட்டதா..? கவலை வேண்டாம்… வாழ்க்கை சந்தோஷமா இருக்க இதை செய்யுங்கள்..!!

ஒவ்வொரு வயதிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நாம் நடந்து கொள்ள வேண்டி இருக்கும். இங்கு 40 வயதுடைய பெண்கள் மற்றும் ஆண்கள் பின்பற்றவேண்டிய சில விஷயங்களைப் பற்றி இதில் பார்ப்போம்.

அனைவருக்கும் குறிப்பிட்ட வயதிற்கு மேல் முதுகு வலி, தோள்பட்டை வலி, தசை வலி வராமல் இருக்க உடற்பயிற்சி செய்யுங்கள். நாளொன்றுக்கு 30 நிமிட நடைப்பயிற்சியாக இருந்தாலும் சரி. 20 வயது டீன்ஏஜ் பருவத்தினருடன் உங்கள் நேரத்தை செலவிடுங்கள். ஏனெனில் இது இளமையான அனுபவத்தை தரும். நீங்கள் பொது நிகழ்வுகளில் பேச தயக்கப்படுவீர்களா? அதனை தவிர்க்க உங்களின் குடும்பத்தினரை தவிர்த்து, வேறு ஒரு குழுவிடம் பேசுங்கள்.

அப்போது தான், நீங்கள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி விடுவீர்கள் என்ற பயம் உங்களை விட்டு நீங்கும். அதிகாரம் கொண்ட நபருக்கு கீழ் வேலை செய்கிறீர்கள் என்றால், அவர் கொடுக்கும் வேலையை முடிக்கும் கடமை உணர்வு உங்களுக்கு வரும். ஆரம்பத்தில் இது திருப்திகரமாக இல்லை என்றாலும், அது உங்களின் தொழில் தேர்வை பிரதிபலிப்பதோடு, தொழில்ரீதியாக உங்களை மேலும் மெருகேற்றும். விமான பயணம் மூலமாக அருகில் இருக்கும் நாடுகளுக்கு சென்று வாருங்கள்.

இந்த அனுபவத்தால், அயல்நாட்டு கலாச்சாரம் பற்றி தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல், திறந்த மனநிலையோடு இருந்தால், நாம் செல்லும் எல்லா இடங்களிலும், நம்மை கண்ணியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வரவேற்பார்கள் என்பதையும் அறிந்து கொள்ளலாம். உங்களை விட குறைவான வசதி வாய்ப்புகள் உள்ள ஒருவருக்கு உதவுங்கள். அது ஒரு நாளாக இருந்தால் கூட, உங்களின் நேரத்தையும் கவனத்தையும், சுயநலமில்லாத ஒரு காரியத்திற்கு செலவிடுங்கள்.

நீங்கள் கல்வி கற்றுக்கொடுத்தாலும் சரி அல்லது மருத்துவ உதவி செய்தாலும் சரி, அது உங்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும். பல தொண்டு நிறுவனங்கள், பலரின் சிறிய உதவியையும் கூட எதிர் நோக்கி காத்திருக்கின்றனர். வேகம் மற்றும் ஆபத்துகள் சூழ்ந்த இரு சக்கர வாகன பயணம் நமக்கு பெரும் உற்சாகத்தை அளிக்கும். அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

ஆனால், மறக்காமல் தலைக் கவசம் அணிந்து கொண்டு வாகனத்தை இயக்குங்கள். சுய தொழிலை தொடங்குங்கள் நீங்கள் பல விஷயங்களை தெரிந்து கொள்வீர்கள். பல மக்களை சந்திப்பீர்கள், வேகமாக விஷயங்களை கற்றுக்கொள்வீர்கள், பலவற்றை திறமையாக கையாளுவீர்கள். சின்ன சின்ன விஷயங்களுக்கு பதற்றமாவதை குறைத்துக்கொள்வீர்கள். அதுமட்டுமில்லாமல், நீங்கள் ஒரு சாதனை படைத்துள்ளீர்கள் என்ற உணர்வு அப்போது தான் உங்களுக்கு ஏற்படும்.

Categories

Tech |