Categories
தேசிய செய்திகள்

இனி போன் தொலைந்தால் கவலையில்லை…. புதிய தொழில்நுட்பம் அறிமுகம்…. மத்திய அரசு அதிரடி…!!

திருடுபோன ஸ்மார்ட்போன்களை கண்டுபிடிப்பதற்காக புதிய தொழில்நுட்பம் ஒன்றை இந்திய அரசு கண்டுபிடித்துள்ளது. 

இனிமேல் உங்களது ஸ்மார்ட் போன் திருடு போனால் அது பற்றி அதிகமாக கவலை கொள்ள வேண்டாம். ஏனென்றால் அதை கண்டு பிடித்து ஒப்படைக்கப் தான் இந்திய அரசு தற்போது புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கலாம் ஆனால் அதுதான் உண்மை. வழக்கமாக ஸ்மார்ட் போன் திருடு போனால் காவல்நிலையத்தில் புகார் அளிப்போம்.

Image result for mobile using

ஆனால் நவீன உலகில் உள்ள திருடர்கள் நாம் காவல் நிலையத்திற்கு செல்வதற்கு முன்பே செல் போனின் சிம் கார்டை கழட்டி விடுவதுடன் ஐஎம்இ நம்பரை சேர்த்து  மாற்றி மற்றொரு நபரிடம் விற்றுவிடுகின்றனர். இந்நிலையில் போன் திருட்டுகளை தடுத்து நிறுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. அந்த வகையில் 2017இல் center for development of telematics. என்ற அமைப்பினால் தொடங்கப்பட்ட ப்ராஜெக்ட் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

Image result for mobile using

இந்த புதிய டெக்னாலஜி மூலமாக திருடப்பட்ட ஸ்மார்ட்போனின் ஈஸியா ட்ராக் பண்ணலாம். மொபைலின் இமெய் நம்பரை மாற்றினால் கூட எளிதாக கண்டுபிடித்துவிடலாம். இதையடுத்து திருடப்பட்ட போனை திருடர்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு லாக்கூட செய்து கொள்ளலாம். இந்த பிராஜக்ட் இன் படி ஒவ்வொரு போனுக்கும் 15 இலக்க சீரியல் நம்பர் வழங்கப்படும்.

Image result for mobile using

அந்த நம்பர் நமக்குத் தெரிந்திருந்தால் போதும் அது அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ஷேர் செய்து போன் லாக் செய்யபடும். இதன்காரணமாக திருடப்பட்ட மொபைலை எங்கேயும் பயன்படுத்த முடியாது. திருடப்பட்ட ஸ்மார்ட்போன்களை விற்க முடியாது என்று தெரிந்தால் யாரும் திருட மாட்டார்கள். இந்த புதிய தொழில்நுட்பம் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்ட நிலையில் மேற்கொண்டு சில பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த தொழில்நுட்பமானது விரைவில்  அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |