குடும்பத்தினர் வெளிஊருக்கு சென்றிருக்கும் நேரத்தில் மர்மநபர்கள் பீரோவில் இருந்த 24,000 ரூபாய் பணத்தை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள ராமநத்தம் பகுதி சர்ச் தெருவில் நாராயணன்- முத்துலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் நாராயணன் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார் . இதனால் முத்துலட்சுமி தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துலட்சுமி தனது கணவரின் சொந்த ஊரான வடபாதிக்கு 2 குழந்தைகளுடன் சென்றுள்ளார். இதனையடுத்து முத்துலட்சுமி வெளியூருக்கு செல்வதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் அவரின் வீட்டிற்குள் நுழைந்து பீரோவில் இருந்த 24,000 ரூபாய் பணத்தை திருடி சென்றுள்ளனர் .
மேலும் அவர்கள் திட்டமிட்டபடி வீட்டிலுள்ள அலமாரி மற்றும் பீரோவை உடைத்து அதில் வைத்து இருந்த ரூபாய் 24000 ரொக்க பணத்தை திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து ஊரிலிருந்து திரும்பி வந்து பார்த்த முத்துலட்சுமி பீரோவில் இருந்த பணம் திருடப்பட்டதை அறிந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிதுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பதிவாகியுள்ள தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.