Categories
மாநில செய்திகள் வேலூர்

தோசை மாஸ்டரின் “மாஸ்டர் பிளான்” … 7 ஆண்டுகளில் கோடிஸ்வரன்..! போலீஸ் கிடுக்கு பிடியில் வெளிவந்த உண்மை

தமிழகத்தில் 7 ஆண்டுகளாக கொள்ளையடித்து கோடீஸ்வரரான நபரை போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில்  பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் 24ம் தேதி சென்னை மயிலாப்பூரில் உள்ள டாஸ்மார்க் கடை ஒன்றில் பூட்டு உடைக்கப்பட்டு சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து மயிலாப்பூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார்  தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் டாஸ்மார்க் கடையில் உள்ள  சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் மங்கி குல்லா அணிந்த ஒருவர் கொள்ளையடித்தது பதிவாகியிருந்தது.

அவ்வாறு கொள்ளையடித்த  நபர் அந்த டாஸ்மாக் கடையில் இருந்து அருகில் உள்ள பஸ் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் செல்லும் பஸ்சில் ஏறியது  சிசிடிவியில் பதிவாகியிருந்தது.

அவர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயில் மூலம் திருவள்ளூர் சென்றுள்ளார். திருவள்ளூர் சென்று திருவள்ளூரில் இருந்து ஷேர் ஆட்டோ பிடித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருந்தது. பின்னர் அவர் ஷேர் ஆட்டோவில் இருந்து இறங்கி தியேட்டருக்கு பின்புறம் அமைந்துள்ள ஒரு வீட்டிற்குள் சென்றார்.

இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தொடர்ந்து அருகில் நடத்திய விசாரணையில் அவர் அந்த குடியிருப்பில் தனியாக தங்கிய உள்ளதும்  வேலூரை சேர்ந்த இவர்  தோசை மாஸ்டர் ஆக பணிபுரிந்து வருவதாகவும் தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் வேலூர் மாவட்டம் சென்று அவரது சொந்த ஊரிலும் விசாரணையை தொடங்கினர். அங்கு அவர் சகல வசதிகளுடன் இருப்பது போலீசாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் அவர் சென்னையில் கிழிந்த பழைய துணி அணிந்து உலவி வந்துள்ளார்

இருப்பினும் ஹோட்டல் சென்றுஅந்த நபரிடம் டாஸ்மார்க் கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.  இந்த நபர் டாஸ்மார்கை மட்டும்   குறிவைத்து 7 வருடங்களாக  கொள்ளையடிப்பதும்  அந்த பணத்தின் மூலம் கோடீஸ்வரராக வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.  சமுதாயத்தில் இவர்  குறித்து யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக தோசை மாஸ்டர் ஆகவும் பணிபுரிந்து வந்தது  விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும் தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |