Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

டபுள் பீன்ஸ் கிரேவி…அதிக சுவையுடன் இருக்க…இப்படி செய்யுங்க…!!

டபுள் பீன்ஸ் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்: 

வெங்காயம்                                  – 1
தக்காளி                                          –  1
பூண்டு                                             – 2 பல்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள்                                   – கால் டீஸ்பூன்
உப்பு                                                  – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி                               – சிறிது
எண்ணெய்                                     – 4 டீஸ்பூன்
சோம்பு                                             – கால் டீஸ்பூன்
சீரகம்                                                – கால் டீஸ்பூன்

செய்முறை:

குக்கரில் 5 மணி நேரம் ஊற வைத்த டபுள் பீன்ஸ் கால் டீஸ்பூன் சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 3 விசில் வைக்கவும்.

வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அதனுடன் சிறிதாக நறுக்கிய இஞ்சி பூண்டு, தக்காளி, மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மிளகாய் தூள் வாசனை போகும் வரை மிதமான தீயில் 5 நிமிடம் வைத்து இறக்கவும்.

மிக்ஸி ஜாரில் சிறிது தண்ணீர், வதக்கி வைத்த மசாலாவையும் சேர்த்து நன்றாக அரைக்கவும். பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்து வைத்த மசாலாவை அதனுடன் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

10 நிமிடம் கொதித்ததும் கொத்தமல்லி தூவி கிளறி இறக்கவும்.இப்போது சுவையான டபுள் பீன்ஸ் கிரேவி ரெடி. அதை சப்பாத்தி  தோசையுடன் பரிமாறவும்.

Categories

Tech |