Categories
மாநில செய்திகள்

துப்புரவாளர்களுக்கான இரட்டை ஊதியம் ஒப்பந்த ஊழியர்களுக்கும் பொருந்தும் – அமைச்சர் வேலுமணி!

கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய ஆய்வு ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி வேலுமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அப்போது கோவை அஇதிமுக மாவட்ட கழகத்தின் சார்பாக ரூபாய் 25 லட்சத்திற்கான நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி.

கோவையில் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பேட்டியளித்த அமைச்சர் வேலுமணி, துப்புரவாளர்களுக்கான இரட்டை ஊதியம் ஒப்பந்த ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று கூறியுள்ளார்.

பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது என அவர் தெரிவித்துள்ளார். கால்நடை தீவனம் கொண்டு செல்ல தடை இல்லை என்றும் அமைச்சர் வேலுமணி தகவல் அளித்துள்ளார்.

Categories

Tech |