Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்…. வெளியான கலக்கல் தகவல்….!!!

அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் தல அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் “வலிமை” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரபல பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் ஒரு சில காட்சிகள் மட்டுமே இன்னும் படமாக்கப்பட உள்ள நிலையில் இப்படத்தின் ஆரம்ப கட்டத்தில் இருந்து அஜித் ரசிகர்கள் வலிமை படத்திற்கான அப்டேட்டை வெளியிட வேண்டும் என்று தொடர்ந்து கேட்டு வருகின்றனர். ஆனால் படக்குழு இதுவரை எந்த ஒரு அப்டேடையும் வெளியிடாமல் இருப்பது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் வகையில் வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் அதன் மோஷன் போஸ்டர் ஆகிய இரண்டும் இந்த மாதத்திற்குள் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |