Categories
கல்வி தேசிய செய்திகள்

டபுள் ட்ரீட் கொடுத்துட்டாங்களே… அறிவிப்பால் அசத்தும் அரசு… மாணவர்கள் குஷி …!!

மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நாளையோடு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நிறைவடைய இருக்கிறது. ஊரடங்கு உத்தரவு 6 முறை மாற்றி அமைக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஏழாவது முறையாக மேலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் அறிவித்திருந்தன. அதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகமும் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு தளர்வு 2.0 என்ற தலைப்பில் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.

இது நாடு முழுவதும் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்த அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்டது. அதில் ஜூலை 31-ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், கோச்சிங் சென்டர் திறக்கப்பட மாட்டாது. தொடர்ந்து இயங்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஏற்கனவே பல மாநிலங்கள் மாணவர்கள் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் என்ற அறிவுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு மாதத்திற்கு பள்ளிகள் இயங்காது என்ற உத்தரவு மாணவர்களுக்கு டபுள் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Categories

Tech |