Categories
தேசிய செய்திகள்

கோலார் தங்கச் சுரங்கத்தில் 1000 அடி ஆழம் இறங்கி தங்கம் திருட முயன்ற 3 பேர் உயிரிழப்பு!

கோலார் தங்க சுரங்கம் கத்தில் 1000 அடி ஆழம் இறங்கி தங்கம் திருட முயன்ற 5 பேர் கொண்ட கும்பலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகின் மிக ஆழமான 2வது தங்க சுரங்கம் கோலார் தங்க வயலாகும். இந்த ஆழமான சுரங்கத்தில்தான் 121 ஆண்டுகளாக லட்சக்கணக்கான தமிழர்களின் அயராத உழைப்பால் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு வந்தது. ஆனால் 2001ம் ஆண்டு தங்கத்தின் இருப்பு குறைவு, பிரித்தெடுக்க ஆகும் செலவு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் கோலார் தங்க சுரங்கம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தங்க சுரங்கத்தை மீண்டும் திறக்கும் திட்டத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டுவிட்டது.

அப்போதிலிருந்து பராமரிப்பின்றி இந்த சுரங்கம் உள்ளது. இந்த நிலையில் மொத்தம் 5 பேர் கொண்ட கும்பல் கோலார் தங்க சுரங்கத்தில் தங்கம் திருட சென்றுள்ளனர். முதலில் 3 பேர் 1000 அடி தூரம் ஆழத்திற்கு சென்றுள்ளனர். அங்கு ஆக்சிஜன் கிடைக்காததால் ஒவ்வொருவராக மயங்கி விழுந்துள்ளனர். மற்ற இருவரும் 200 அடி ஆழத்தில் இருந்த நிலையில், இதனை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக அவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அந்த முயற்சி பலனளிக்காமல் போனதால் அவர்கள் தங்களது நண்பர்கள் உதவியை நாடியுள்ளனர்.

ஆனால் அவர்கள் இது குறித்து உடனைடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். நேற்று இராது 11 மணி அளவில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடியாக அப்பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் நள்ளிரவு 1.30 மணிக்கு 3 பேரில் இரண்டு பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கோலார் தங்க சுரங்கத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்பது தான்
அப்பகுதி மக்களில் நீண்ட நாள் கோரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |