Categories
மாநில செய்திகள்

அம்மா என்ன யாரோ தொரத்துராங்க மா?… ‘விஸ்வாசம்’ பட மீமை வைத்து kavalan app-க்கு விளம்பரம்..!!

நடிகர் அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்பட காட்சியொன்றை மீமாக மாற்றி, தேனி மாவட்ட காவல்துறை, kavalan app -ஐ  விளம்பரப்படுத்தியது இணையத்தில் வைரலாகிவருகிறது.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் காவல்துறை அதிரடியாக ஒரு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு அவசர காலத்தில் உடனடி பாதுகாப்பு அளிக்கும் வகையில், காவலன் SOS  என்ற மொபைல் செயலி (APP) செயல்பட்டு வருகிறது. சிலருக்கு இந்த செயலி தெரியாமல் இருக்கலாம் அதற்காக தமிழக காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டு வெளியான ‘விஸ்வாசம்’ படத்தில் நடிகர் அஜித்தின் மகளை  வில்லன்கள் கொல்ல துரத்துவார்கள். அப்போது தனது மகளை (ஸ்வேதா) அஜித்குமார் வந்து காப்பாற்றுவார். இந்த காட்சியில் நயன்தாராவும் உனக்கு ஒன்னும் ஆகாது என்று மகளிடம் போனில் கூறுவார். தற்போது அஜித்குமார் காப்பாற்றும் அந்த காட்சியை மீமாக தேனி மாவட்ட போலீசார் மாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

அதாவது அம்மா என்ன யாரோ தொரத்துராங்க மா? என்று அஜித் மகள் கூற, அதற்கு நயன்தாரா (அம்மா) உன் மொபைல இருக்குற kavalan sos app பட்டனை அழுத்து என்று சொல்கிறார். உடனே மகள் சரிமா.. என்று சொல்கிறார். அடுத்த நொடியே அஜித் வருகிறார்… அதாவது தேனி போலீஸ் வருகின்றனர். அதன்பிறகு நயன்தாரா இனி உன்ன யாரும் எதுவும் செய்ய முடியாதுன்னு சொல்ராங்க. காவலன்  செயலியில் உள்ள sos என்ற பட்டனை அழுத்தினால்,  போலீசார் விரைந்து வந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள் என விளக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பலரும் பதிவுக்கு கீழே போலீசாரை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது இந்த போட்டோ வைரலாகி வருகிறது. விஸ்வாசம் படத்தில் தல அஜித் தேனி மாவட்டக்காரராக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |