Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவிக்கு வரதட்சணை கொடுமை…. வேறொரு பெண்ணுடன் குடும்பம்…. போலீசாரின் தீவிர விசாரணை…!!

மனைவியிடம் அதிக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி, பின் வேறொரு பெண்ணுடன் அவரது கணவர் குடும்பம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புங்கனூர் கிராமத்தில் கிரேனா என்ற பெண் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பெண்ணிற்கும் உக்கிரன்கோட்டை பகுதியில் வசித்து வரும் ராஜபாண்டி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கிரேனாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு ராஜபாண்டி மற்றும் அவரது பெற்றோர் எட்வர்ட், ரூத் போன்றோர் கொடுமை படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து கோபத்தில் கிரேனா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து கிரேனாவிற்கு அவரது கணவர் ராஜபாண்டி எலிசபெத் என்ற மற்றொரு பெண்ணுடன் சேர்ந்து இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் நெல்லை தாலுகா மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து கிரேனா புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜபாண்டி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |