உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விரைவில் whatsapp நிறுவனம் பிரைவேசி அப்டேட்களை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
அதாவது யார் யாரெல்லாம் உங்களுடைய whatsapp லாஸ்ட் சீன் பார்க்க வேண்டும் மற்றும் ஸ்டேட்டஸ், டிபி ஆகியவற்றை பார்க்க வேண்டும் என்பதை நாமே முடிவு செய்து கொள்ளலாம். தொடக்கத்தில் ஸ்டேட்டஸுக்கு மட்டுமே இவ்வாறு இருந்தது. தற்போது அதேபோல லாஸ்ட் சீன் மற்றும் டிபியை யார் யார் பார்க்க வேண்டும் என்பதை நாமே முடிவு செய்து கொள்ளலாம்.