பாகிஸ்தானில் அணுசக்தி திட்டங்களின் தந்தை என்று அழைக்கப்படும் Dr. அப்துல் காதிர் கான் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் அணுசக்தி விஞ்ஞானியான Dr. அப்துல் காதிர் கான் இன்று மரணமடைந்துள்ளார். இச்செய்தியை, அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டிருக்கிறது. தற்போது, Dr. அப்துல் காதிர் கானுக்கு 85 வயதாகிறது.
இந்நிலையில் இன்று காலையில், அவர் இஸ்லாமாபாத் நகரில் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Dr. அப்துல் காதிர் கான், நாட்டின் அணுசக்தி திட்டங்களுக்கான தந்தை என்று அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.