Categories
உலக செய்திகள்

சீனாவின் உகான் மீண்டது எப்படி ? மருத்துவர்கள் சொல்லும் தகவல் ..!!

வூகான் நகரில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தியது எப்படி என  அங்குள்ள மருத்துவர் தெரிவித்துள்ளார்

கொரோனா முதன்முதலில் பாதிப்பை ஏற்படுத்திய இடம் சீனாவில் இருக்கும் வூகான் நகரம். ஆரம்பத்தில் அதிக அளவு பாதிப்பு இருந்தாலும் சரியான முறையில் கையாண்டு கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதற்கு அந்நகரில் இருக்கும் மருத்துவமனை ஒன்று முக்கிய பங்காற்றியது.

அந்த மருத்துவமனை தலைவர் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொழுது தனக்குக் கிடைக்கப்பெற்ற அனுபவங்களைப் பற்றி உள்ளூர் ஊடகங்களுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் தொற்றிலிருந்து மீண்டது பற்றிய ரகசியத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். அது குறித்து அவர் கூறியதாவது, “ஆரம்பத்தில் இந்த தொற்று பரவத் தொடங்கியதும் அதற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும் பாதிக்கப்பட்டனர்.

மருத்துவர்கள் அப்போது முகக் கவசங்கள் அணிவதில்லை. அதனைத் தொடர்ந்து 30,000 மருத்துவ பணியாளர்கள் பாதிப்புக்குள்ளானதை அடுத்து முக கவசத்தின் அவசியத்தை உணர்ந்து அனைவரும் முக கவசம் அணிந்து பணியாற்ற தொடங்கினார்கள். இதனைத்தொடர்ந்து மருத்துவர்களுக்கு நோய் பரவும் அபாயம் குறைந்தது.

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அவர் மூலம் குடும்பத்தினருக்கு தொற்று ஏற்பட்டு  5, 6 என ஒரு குடும்பத்திலிருந்து அனுமதிக்கப்பட்டனர். இதனையும் பாடமாக எடுத்துக்கொண்டு சிறிய அறிகுறி இருந்தாலும் அவர்களை வீட்டிலிருந்து வெளியேற்றி மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்க முடிவெடுத்தோம்.

அரசும் நோயின் தீவிரத்தை உணர்ந்து கொண்டு மருத்துவமனையில் இடவசதி போதாது என்பதால் பொது இடங்களான உடற்பயிற்சி கூடங்கள், பொருட்காட்சி மையங்கள் போன்றவற்றை தற்காலிக மருத்துவமனையாக உபயோகப்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கியது. அதனைத் தொடர்ந்து சிறிய கொரோனா அறிகுறிகள் தென்பட்டாலும் உடனடியாக அவர்களை தனிமைப்படுத்தி வைத்தோம்.

இந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மூன்று விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

  • பாதிக்கப்படக்கூடிய மக்களை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
  • பரிமாற்ற பாதையை கட்டுப்படுத்துவது அவசியம்.
  • நோய்த்தொற்றின் ஆதாரத்தையும் கட்டுப்படுத்திவிட வேண்டும்.

கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முக்கிய பங்காற்றியது முக கவசங்களும் மற்றும் சிறிய அறிகுறிகளுடன் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தியதும் தான். இந்த இரண்டுமே கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வர முக்கிய காரணமாக அமைந்தது” எனக் கூறினார்.

Categories

Tech |