உச்சநீதிமன்ற உத்தரவுபடி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அதிமுக பொது குழு தொடர்பான வழக்கை விசாரித்து ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்று நேற்று தீர்ப்பு வழங்கினார். மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே தான் பொதுக்குழுவை கூட்ட முடியும் என்றும், தற்காலிக அவை தலைவர் பொதுக்குழுவை கூட்ட அதிகாரமில்லை.
ஒன்றரை கோடி தொண்டர்களும் ஒற்றை தலைமை விரும்பினார்களா ? என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.தொண்டர்களின் மனநிலையை 2500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா ? என்ற பல்வேறு கேள்விகளையும் மநீதிபதி அவர் தீர்ப்பிலே முன்வைத்திருந்தார்.
இந்த நிலையில்தான் இன்றைக்கு இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதி கொண்ட அமர்வில் நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர மோகன் அமர்வில் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகி தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்து, அந்த வழக்கு அவசர வழக்காக திங்கட்கிழமை விசாரிக்க வேண்டும் என்று முறையீடு செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் நீங்கள் வழக்கை தாக்கல் செய்யுங்கள், திங்கள்கிழமை விசாரிக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.