நடிகர் சிம்பு நடிக்கும் கொரோனா குமார் என்ற திரைப்படம் ட்ராப் ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது.
“மாநாடு” திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் உற்சாகமடைந்தார் நடிகர் சிம்பு. இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் “வெந்து தணிந்தது காடு” மற்றும் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் “பத்து தல” படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் சிம்பு. இதனைத் தொடர்ந்து கன்னடத்தில் இயக்குனர் நரதன் இயக்கத்தில் “முஃப்தி” என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் பணி தொடங்கி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த தமிழ் ரீமிக் மூவி தாமதமானதால் நடிகர் யாஷ் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்க கமிட் ஆனார் இயக்குனர் நரதன்.
இதனை அடுத்து இயக்குனர் கோகுல் இயக்கத்தில் “கொரோனா குமார்” என்ற திரைப்படத்தில் நடிக்க சிம்பு கமிட் ஆனார். இந்நிலையில் கோகுல் ஆர். ஜே. பாலாஜி நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். எனவே சிம்புவின் “கொரோனா குமார்” திரைப்படம் ட்ராப்பானதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் லேட்டஸ்ட் நடிகர் சிம்புவின் அடுத்த படம் சுதா கொங்கரா அல்லது ஏ. ஆர். முருகதாஸ் இருவரில் ஒருவர் தான் இயக்கவுள்ளதாகவும். இந்தத் திரைப்படத்தில் ஏ. ஆர். முருகதாஸ் படம் சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்டில் வெளியாகவுள்ளதாக தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.