இன்று வெளியாக இருக்கும் திரௌபதி திரைப்படம் குறித்து அர்ஜுன் சம்பத் விளக்கியுள்ளார்
இன்று திரைக்கு வரவிருக்கும் திரௌபதி திரைப்படம் ஜாதியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என தகவல் பரவியதை தொடர்ந்து இதனால் பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளதாக எண்ணி காவல்துறையினர் பாதுகாப்புடன் இப்படத்தில் உள்ள முக்கிய காட்சிகள் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு போட்டுக் காட்டப்பட்டது.
பாஜக கட்சியின் எச் ராஜா, அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் இப்படத்தை பார்த்தனர். படத்தை பார்த்து முடித்த அர்ஜுன் சம்பத் திரௌபதி திரைப்படம் ஜாதி தொடர்புடைய படம் என யாரோ பரப்பியுள்ளனர். உண்மையில் இது உண்மை காதலை மையமாக கொண்ட திரைப்படம் எனவும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் திரைப்படம் எனவும் தெரிவித்துள்ளார்.