Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தூய்மை பணியாளர் இறப்பிற்கு… தக்க இழப்பீடு வழங்க வேண்டும்… திராவிட தமிழர் கட்சியினர்ஆர்ப்பாட்டம்…!!

நெல்லையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னிலையில் திராவிட தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லையில் திராவிட தமிழர் கட்சியினர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் தூய்மை பணியாளர் பணியில் இருக்கும் போதே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவருடைய குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்றும் கொடிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிட தமிழ் கட்சியின் மாவட்ட செயலாளர் திருகுமரன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

Categories

Tech |