மக்களவை தேர்தல் வெற்றியை கொண்டாடும் வகையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தொண்டர்களுக்கு வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார்.
மக்களவை தேர்தல் முடிவு தேசியளவில் பாஜகவிற்கு சாதகமாகவும் , தமிழகத்தில் திமுக_வுக்கு சாதகமாகவும் இருந்தது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக போட்டியிட்ட 5 இடங்களில் ஓன்று கூட வெற்றி பெற வில்லை. திமுக கூட்டணி போட்டியிட 38 தொகுதிகளில் 37 இடங்களில் வெற்றி பெற்றது. இத வெற்றியை திமுக_வினர் கொண்டாடி வருகின்றனர். கலைஞர் கருணாநிதி மறைவுக்கு பின்னர் திமுக சந்திக்கும் முதல் பொது தேர்தல் இதுவாகும்.
இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் , திராவிட இயக்கத்தை அழிக்க, எத்தனை வித்தைகள் செய்தாலும், குட்டிக்கரணம் போட்டாலும் இங்கே எடுபடாது என்பதே தமிழ்நாட்டு மக்களின் தனிப் பெரும் தீர்ப்பு. இனி வரும் காலம், மாநிலங்களை மையப்படுத்தும் ஆக்கப்பூர்வ அரசியலுக்கான காலம். மக்களின் நலன் காக்கும் கழகத்தின் வெற்றிப் பயணம் தொடரும்.
பொய் நெல்லைக் குத்தி, புரளிச் சோறு பொங்க நினைத்தவர்களை, வாக்கு எனும் அகப்பைக்கரண்டியால் வாக்காளர்கள் துரத்தியடித்திருக்கிறார்கள். இந்த மகத்தான இந்த வெற்றிக்கு நிச்சயமாக நான் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது. ஓயாமல் உழைத்த நிர்வாகிகள், தொண்டர்கள் இல்லாமல் வெற்றி இந்த அளவுக்குச் சாத்தியமாகியிருக்காது. தி.மு.க.வினரும், தோழமைக் கட்சியினரும் இந்த வெற்றியின் முக்கிய பங்குதாரர்கள்.
நாடாளுமன்றத்திலும், சட்டசபையிலும் மக்கள் நலன் காக்கும் உரிமைக் குரலாக தி.மு.க. ஓங்கி ஒலிக்கும். மக்களுக்கெதிரான பிளவு சக்திகள் தமிழ்நாட்டில் தலையெடுக்காதவாறு விழிப்புடன் காவல்காக்கவேண்டிய கடமையும் பொறுப்பும் கொண்ட கொள்கைத் தோழமையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்று முக ஸ்டாலின் எழுதிய கடிதம் மூலமாக கேட்டுக் கொண்டுள்ளார்.இதை ஸ்டாலின் தனது டிவீட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
திராவிட இயக்கத்தை அழிக்க, எத்தனை வித்தைகள் செய்தாலும், குட்டிக்கரணம் போட்டாலும் இங்கே எடுபடாது என்பதே தமிழ்நாட்டு மக்களின் தனிப் பெரும் தீர்ப்பு.
இனி வரும் காலம், மாநிலங்களை மையப்படுத்தும் ஆக்கப்பூர்வ அரசியலுக்கான காலம்.
மக்களின் நலன் காக்கும் கழகத்தின் வெற்றிப் பயணம் தொடரும்! pic.twitter.com/8fQbn14iVR— M.K.Stalin (@mkstalin) May 25, 2019