Categories
அரசியல் மாநில செய்திகள்

டெல்டா பகுதிகளில் கால்வாய் தூர்வாரும் பணிகளை முன்கூட்டியே முடிக்காதது ஏன்?: ஸ்டாலின் கேள்வி!!

காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஏன் முன்கூட்டியே மேற்கொள்ளவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்னும் 18 நாட்களில் தூர்வாரும் பணி முழுமையாக நிறைவேற்றப்படுமா? எனவும் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணியை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

முறைகேட்டுக்கு இடம் தராமல் வெளிப்படையாக கடைமடை வரை தங்கு தடையின்றி தூர்வார வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்துள்ளார். அதிகாரிகளிடம் இருந்து அறிக்கை பெற்று தூர்வாரும் பணி அமோகமாக நடந்ததாக கணக்குக்காட்ட வேண்டாம் என விமர்சனம் செய்துள்ளார். விவசாய சங்க பிரதிநிதிகளையும் கண்காணிப்புக் குழுவில் இடம்பெற செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

கால்வாய் தூர்வாரும் பணிகளில் எந்தவித முறைகேட்டுக்கும் இடம் தரக்கூடாது என தெரிவித்துள்ளார். குருவை சாகுபடிக்கு ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கும் அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது என கூறிய அவர், அணையில் நீர் இருப்பது தெரிந்திருந்தும் கால்வாயை தூர்வாருவது குறித்து முதல்வர் கவலைப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்படும் என்று இப்போது தூர்வாரும் பணியை அரசு அறிவித்துள்ளது. 18 நாட்களில் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தூர்வாறிவிடுவார்களா? என கேள்வி எழுப்பினார். அப்படி மேட்டூரில் திறக்கப்படும் நீர் கடைப்படை பகுதிக்கு சென்றடையுமா? என அடுத்தடுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |