Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடற்சூட்டை தணிக்க புதினாமோர் குடிங்க …!!!

உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியளிக்கும்  புதினா மோர் எப்படி செய்வது எனக் காணலாம் 

தேவையான பொருட்கள் :

மோர்     – 1 லிட்டர்.
புதினா    – 1 கட்டு.
இஞ்சி     – 20 கிராம்.
மிளகுத் தூள், பெருங்காயத்தூள்   – 2 ஸ்பூன்.
எண்ணெய், கடுகு, கொத்தமல்லி   – தேவைக்கு ஏற்ப
உப்பு     – தேவையான அளவு

mint,ginger,buttermilk incrdients hd க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் இஞ்சியை அரைத்து சாறை மட்டும் வடிகட்டி கொள்ள வேண்டும் . பின் புதினாவை நன்கு சுத்தம் செய்து, எண்ணெயில் வதக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.  அதனுடன்  மோர், மிளகுத் தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவேண்டும் .
பிறகு பெருங்காயத்தூள், இஞ்சிச் சாறு சேர்த்து நன்கு கலந்தவுடன்  கடுகு, கறிவேப்பிலை சேர்த்து  தாளித்து பரிமாறினால்   புதினா மோர் தயார் .

Categories

Tech |