Categories
தேசிய செய்திகள்

குடிமகன்களுக்கு மதுபானம்….. கேரளாவில் கருப்பு பட்டை அணிந்து நாளை மருத்துவர்கள் எதிர்ப்பு!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்பதால் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் வீட்டிற்குள்ளே முடங்கி கிடைக்கும் கேரள மதுபிரியர்கள் பலரும் தற்கொலை செய்யும் நிலையில் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயன் கேரளாவில் மதுபானத்திற்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர் பரிந்துரைப்படி மதுபானம் தர உத்தரவிட்டார். மருத்துவரின் பரிந்துரையின் படி குடிமகன்களுக்கு மதுபானம் வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் இதற்கு மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். மதுவை அருந்துமாறு பரிந்துரைக்க முடியாது என்று கேரள மருத்துவர்கள் சங்கம் மறுத்து தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் எடுத்திருக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை அனைத்து மருத்துவர்களும் சட்டையில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுவுக்கு அடிமையானவா்களுக்கு மருத்துவா்கள் பரிந்துரையின்பேரில் மது வழங்குவது என்பது அறிவியல்பூா்வமான நடவடிக்கை அல்ல என்று கேரள அரசு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |