Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பன்னுனான்னு தெரியல…. மாணவி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் விஷம் குடித்த பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி துர்கா என்ற மகள் இருந்தார். இவர் அப்பகுதியிலுள்ள பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் திடீரென வீட்டில் விஷம் குடித்து விட்டு மயங்கிக் கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி துர்கா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |