டீ அதிக அளவில் அருந்துவதால் உடலில் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன…!!
அநேக மக்களுக்கு டீ குடிக்கும் பழக்கம் அதிக அளவில் இருக்கிறது. ஆபீசிலோ, வீட்டிலோ போகும்போதும் வரும்போதும் டீ யில் பால் சேர்த்தோ சேர்க்காமலோ குடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.இதுபோதாது என்று பெட் டீ,ஆபீசுக்கு போகும்போது ஒரு டீ ஆபீசை விட்டு வரும்போது டீ என டீ குடித்தால் தான் வேலை ஓடுகிறது என்பார்கள்.இதுபோன்ற டீ பிரியர்களால் தான் நம் ஊர்களில் டீ கடைகள் நல்ல ஓட்டம் பிடிக்கிறது.
ஓரிரு முறை குடிப்பது நல்லது என்றாலும் கூட இப்படி ஓட்டகம் போல் குடித்துக் கொண்டடே இருப்பது பல தீய விளைவுகளை தரும். அதிகஅளவில் டீ குடிப்பதால் உடலில் இரும்புசத்து உரிஞ்சபடுவதோடு,துக்கம் குறையும்,தலைவலி,மயக்கம்,மனஉளைச்சல்,வயிற்று பிரச்னை,நெஞ்செரிச்சல் மட்டும் இன்றி இது பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் சில பிரச்சினைகளை ஏர்படுத்தலாம்.மேலும் தொடர்ந்து டீ குடிப்பவர்களுக்கு டீ குடிக்காமல் இருக்கும் போது படபடப்பு ஏற்படும். எனவே ஒருநாளைக்கு ஒரு கப் டீ மட்டுமே குடித்து நன்மைகளைப் பெறுவோம்.
இப்போது எல்லாம் கிரீன் டீ அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றது. அதற்கான காரணம் நோய் எதிர்ப்பு சக்தி அதிமாகின்றது.இது பிராண்ட்ரேட் புற்றுநோய், மார்பக புற்று நோய்,வயிறு புற்று நோய் அபாயம் வெகுவாய் குறைகின்றது.மேலும் இன்றைய ஆய்வுகள் சர்க்கரை நோய், இருதய நோய் பாதிப்பை வெகுவாய்க் குறைக்கின்றது என உறுதி செய்துள்ளது.ஆக நாள் ஒன்றுக்கு 2 கப் கிரீன் டீ குடிப்பது நல்லது.ஆனால் காபி, சாதாரண டீ என எல்லாவற்றையும் சேர்த்து குடிப்பது தவறு. காபி, பால் சேர்ந்த டீ, கறுப்பு டீ இவற்றை விட்டு கிரீன் டீ மட்டும் 2 முறை குடிக்கலாம்.எனவே முடிந்தவரை டீ குடிப்பதை தவிர்க்கவும்.மேலும் கிரீன் டீ குடிப்பது நல்லது.