Categories
மாநில செய்திகள் வேலூர்

“ஜோலார்பேட்டையில் குடிநீர் எடுத்தால் போராட்டம்” துரைமுருகன் எச்சரிக்கை …!!

ஜோலார்பேட்டையில் இருந்து குடிநீர் எடுத்தால் போராட்டம் நடத்தப்படுமென்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரியவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மக்கள் எங்கு பார்த்தாலும் காலி குடங்களுடன் வீதிகளில் குடிநீருக்காக அலைகின்றனர். இந்நிலையில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் குடிநீரை முழுமையாக வினியோகிக்க , குடிநீர் திட்டப் பணிகளுக்காக 200 கோடியை கூடுதலாக ஒதுக்கி உத்தரவிட்டார்.

Image result for துரைமுருகன்

மேலும் அந்தக் கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலமாக தினமும் 10 மில்லியன் குடிநீரை சென்னைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் எடுத்து சென்றால் போராட்டம் நடத்தப்படும் என திமுக பொருளாளர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |