ஜோலார் பேட்டை-சென்னை ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரும் திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுவருகிறது.
சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க ரயில் மூலம் ஜோலார் பேட்டையிலிருந்து குடிநீர் கொண்டு வருவதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. இத்திட்டத்திற்காக ரூ65 கோடி ஒதுக்கப்பட்டன. இந்நிலையில்,மூன்று கட்டங்களாக பணி நடைபெற்று வந்த நிலையில், ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் ஜோலார் பேட்டை ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு ரயில் தொட்டிகளில் நிரப்பப்பட்டது.
இதனை தொடர்ந்து ரயில் புறப்பட தயாராகி வரும் நிலையில் தலைமை செயலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.இதில் சென்னை உட்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.இக்கூட்டத்தில் அமைச்சர் S.P வேலுமணி,அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜோலார் பேட்டையிலிருந்து ரயிலில் கொண்டுவரப்படும் தண்ணீர் மூலம் சென்னையில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 1.5 கோடி லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படும் என்று தெரியவருகிறது.