நமது அன்றாட வாழ்க்கையில் செய்யும் சிறிய தவறான விஷயங்கள், பெரிய ஆபத்தாக முடிந்து விடுகிறது. அதில் ஒன்று தான் ‘நின்றுக் கொண்டே தண்ணீர் குடிப்பது’.
வெளியே சென்று விட்டு வேக வேகமாக நாம் வீட்டுக்குள் வந்தவுடன் நின்றவாறே தண்ணீரை குடித்து விடுகிறோம். ஆனால் இதனால் நமக்கு கிடைக்க வேண்டிய ஊட்டசத்து யாவும் கிடைக்காமல் போய்விடுகிறது. தினமும் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் அதை நாம் தவறான முறையில் செய்வதால், அதனால் நமக்கு எந்த நன்மை இருக்காது.
நாம் தண்ணீரை மெதுவாகத் தான் அருந்த வேண்டும். ஆனால் நின்றுக் கொண்டே தண்ணீர் குடித்தால் நமது உடம்பின் சிறுநீரகம், இரைப்பை, குடல் பாதை போன்றவை பாதிக்கப்படுவதோடு ஆர்த்திரிடிஸ் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே இனிமேல் நின்று கொண்டோ அல்லது நடந்து கொண்டே தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்து, உட்கார்ந்து குடிக்கும் பழக்கத்தை நாம் அனைவரும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும் வேகமாக அருந்துவதன் மூலம் தாகமும் தணிவதில்லை. அமர்ந்து கொண்டு நிதானமாக அருந்துவது தான் நீர் அருந்தச் சரியான முறையாகும். இதைப் பின்பற்றினால் உடல் ஆரோக்கியமும் மேம்படும்.