குடிநீர் ஆலைக்கு உரிமம் வழங்குவது குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
சட்டவிரோதமாக குடிநீர் ஆலை நடத்துவதற்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து தொடுக்கப்பட்ட இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது , அனுமதி இல்லாமல் இருக்கும் குடிநீர் நிறுவனங்கள் அரசுக்கு புதிதாக விண்ணப்பம் கொடுக்க வேண்டும். புதிய விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கலாமா ? வேண்டாமா என்று அரசு இரண்டு வாரத்திற்கும் முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு தரப்பில் புதிதாக 1054 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் , அதில் 690 விண்ணப்பங்கள் தகுதி உடையதாக இருக்கிறது. இதனை பரிசீலனை செய்து முடிவெடுக்க 90 நாள் அவகாசம் கேட்கப்பட்டது.
இதற்க்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி , நிலத்தடி நீர் ரொம்ப முக்கியம். இது மிக முக்கியமான பிரச்சனை எனவே தான் கால தாமதம் செய்யக்கூடாது, 2 வாரத்தில் விண்ணப்பங்கள் மீது முடிவு எடுக்க உத்தரவிட்டோம் என்று தெரிவித்தனர்.
மேலும் இதன் மீது கால நீட்டிப்பு செய்ய மறுத்த நீதிபதி , 2 வார காலத்திற்குள் தமிழக அரசு முடிவு எடுக்காவிட்டால் அதிகாரிகளுக்கு 50,000 அபராதம் விவாதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து , வழக்கை மார்ச் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.