Categories
மாநில செய்திகள்

இளநீர் குடிங்க….. ”விளக்கம் கொடுத்த மோடி” ….. கேட்டு ரசித்த ஷி ஜின்பிங் …… முழு செய்தி தொகுப்பு …!!

மாமல்லபுரத்தில் சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி கண்டு கழித்து ரசித்த இடங்களின் புகைப்பட தொகுப்பு.

சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்க தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் மாமல்லபுரம் வந்தார் பிரதமர் நரேந்திர மோடி .

மாமல்லபுரம் வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை மாமல்லபுரம் அர்ச்சுணன் தபசு பகுதியில்  பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார்.

மாமல்லபுரம் வந்தடைந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை கைகுலுக்கி வரவேற்ற பிரதமர் மோடி நீண்ட நேரம் உரையாடினார். பின்னர் மாம்மல்லபுரத்தில் அர்ச்சுனன் தபசு பகுதியின் சிறப்புகளை சீன அதிபரிடம் பிரதமர் நரேந்திர மோடி விளக்கினார் .

மாம்மல்லபுரத்தில் அர்ச்சுனன் தபசு பகுதியில் உள்ள சிற்பங்கள் முன்பு பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் மாம்மல்லபுரத்தில் அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட பகுதிகளில் சிற்பங்களை ரசித்தனர். பின்னர் வெண்ணெய் உருண்டை பாறையை அருகில் நின்றவாறு பார்வையிட்டனர் .

மாமல்லபுரத்தில் வெண்ணெய் உருண்டை பாறை முன் இருவரும் கைகளை கோர்த்து உயர்த்தி ஒற்றுமையை வெளிப்படுத்தி பிரதமர் மோடி, சீன அதிபருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

மாமல்லபுரத்தில் அர்ச்சுனன் தபசு பகுதியின் சிறப்புகளை சீன அதிபரிடம் விளக்கும் பிரதமர் மோடி விளக்கினார்.

மாமல்லபுரத்தில் ஐந்து ரதம் பகுதியில் அமர்ந்து பேசியவாறு பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் இளநீர் பருகினர்.

மாமல்லபுரத்தில் ஐந்து ரதம் பகுதியில் சிற்ப வேலைப்பாடுகள் குறித்து சீன அதிபரிடம் பிரதமர் மோடி விளக்குகினார் .

மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் லிங்க வடிவில் சோமாஸ்கந்தர், பள்ளிக்கொண்ட நிலையில் உள்ள ஜலசயன பெருமாள் குறித்தும் , குடைவரைக் கோயில்களின் தொன்மை குறித்தும் சீன அதிபருக்கு பிரதமர் மோடி விளக்கினார்.

மின்னொளியில் ஜொலிக்கும் கடற்கரை கோயில்’ மாமல்லபுரத்தில் கடற்கரை கோயிலுக்கு செல்லும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் அங்கு இருவரும் பார்வையிட்டனர்

மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வரவேற்றனர். பிரதமர் மோடியை சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யு உள்ளிட்டோர் வரவேற்றனர். இந்த நிகழ்வில் அனைத்து விவரங்களையும் சீன அதிபருக்கு பிரதமர் மோடி சொல்லி கொடுத்தார்.

Categories

Tech |