‘திரிஷ்யம் 3’ உருவாகுமா என்பது குறித்து தயாரிப்பாளர் ஆண்டனி விளக்கமளித்துள்ளார்.
இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரிஷ்யம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதையடுத்து இந்த படம் தமிழில் கமல்ஹாசன்-கவுதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது . மேலும் இந்த படம் தெலுங்கு ,கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது . தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த வெள்ளிக்கிழமை ஓடிடியில் வெளியானது .
முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘இயக்குனர் ஜீத்து ஜோசப்பிற்கு திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகம் இயக்கும் எண்ணம் இருக்கிறது . ‘திரிஷ்யம் 3′ உருவாகும் என நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார் . மேலும் அவர் திரிஷ்யம் 2 பிற மொழிகளிலும் ரீமேக் செய்ய இருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் கூறியுள்ளார் .