டிரைவர் கொலை வழக்கில் மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள முத்தனம்பாளையம் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூர் அரசு மருத்துவமனை முன்பு தனியார் ஆம்புலன்ஸில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இதே போன்று மதுரை மாவட்டத்தில் உள்ள ஜெய்ஹிந்த் புரத்தில் வசிக்கும் அசோக்குமார் என்பவர் திருப்பூரில் வசிக்கும் முருகன் என்பவரின் ஆம்புலன்ஸை ஓட்டி வருகிறார். இவரும் திருப்பூர் அரசு மருத்துவமனை முன்பாக ஆம்புலன்சை நிறுத்தி பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த 17-ஆம் தேதி திருப்பூர் அரசு மருத்துவமனை முன்பு விக்னேஷுக்கும் அசோக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் விக்னேஷ் அசோக்குமாரின் ஆம்புலன்சில் இருந்த குளிர்சாதனப் பெட்டியை கல்லால் உடைத்துள்ளார். இதனையடுத்து அசோக்குமார் முருகனுக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகராறில் விக்னேஷை அசோக்குமார் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதுகுறித்து திருப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அசோக் குமாரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் கொலைக்கு தூண்டிய பிரிவின் கீழ் முருகனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.