டிரைவர் கொலை வழக்கில் நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆ.மருதப்புரம் பகுதியில் தங்கபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கபாலி என்ற மகன் இருந்துள்ளார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கபாலியும் அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவரும் நண்பர்கள். இவர்கள் 2 பேரும் அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மது அருந்தி வந்துள்ளனர். கடந்த மாதம் 22-ஆம் தேதி முருகன், கபாலி ஆகிய 2 பேரும் மது அருந்திய போது இருவருக்கும் இடையே தேர்தல் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த முருகன் கம்பால் கபாலியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கபாலியை அருகிலுள்ளவர்கள் உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கபாலி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முருகனை கைது செய்துள்ளனர்.