டிரைவர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு பகுதியில் முபாரக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் முபாரக் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக முபாரக் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தும் குனமாகததால் மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் முபாரக் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் முபாரக்கை உடனடியாக மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முபாரக்கை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முபாரக்கின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.