டிரைவரை கத்தியால் குத்திய பெண் உள்பட 4 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சேடபாளையம் பகுதியில் திருக்கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மினி பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருக்கண்ணனின் வீட்டிற்கு அருகில் சிலர் வாடகைக்கு வந்துள்ளனர். அவர்கள் இரவு நேரங்களில் அதிக சத்தத்துடன் பேசிக்கொண்டிருந்ததை திருக்கண்ணன் தட்டிக் கேட்டுள்ளார்.
இந்நிலையில் திருக்கண்ணனிடம் 3 வாலிபர்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோர் கொண்ட கும்பல் அவரை கைகளால் அடித்து தாக்கியுள்ளனர். மேலும் அந்த கும்பலில் இருந்த ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திருக்கண்ணனின் மார்பு, கழுத்து, முதுகு ஆகிய இடங்களில் குத்தியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த திருக்கண்ணன் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த பல்லடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.